Published : 09,Feb 2022 06:20 PM

தவான் முதல் டூப்ளசிஸ் வரை: ஐபிஎல் மெகா ஏலத்தில் டிமாண்ட் அதிகமுள்ள வீரர்கள்! - தொகுப்பு

From-Shikhar-Dhawan-David-Warner-to-Faf-du-Plessis-the-most-wanted-players-in-the-IPL-2022-Mega-Auction-ahead

எதிர்வரும் 15-வது ஐபிஎல் சீசனை முன்னிட்டு ‘மெகா ஏலம்’ வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த முறை 10 அணிகள் ஐபிஎல் களத்தில் பலப்பரீட்சை செய்ய உள்ளன. எப்போதுமே பரபரப்புக்கு துளியளவும் பஞ்சமில்லாத ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் புதிய அணிகளின் வரவு மேலும் த்ரில்லை கூட்டியுள்ளது. ஏலத்திற்கான நேரம் நெருங்க நெருங்க அதற்கான ஹைப் எக்கச்சக்கமாக எகிறி கொண்டிருக்கிறது. 

image

இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிக டிமாண்ட் உள்ள வீரர்கள் குறித்து பார்க்கலாம். இந்த முறை ஒவ்வொரு அணியும் மீண்டும் தொடக்கத்திலிருந்து அணியை கட்டமைக்க வேண்டியுள்ளது. அதிகபட்சம் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என இந்திய கிரிக்கெட் வாரியம் சொல்லிவிட்டது. அதனால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் போக மீதமுள்ளவர்கள் ஏலத்திற்கு வந்துள்ளனர். ஒவ்வொரு அணியும் திறமையிருந்தும் வேறு வழியில்லாமல் விடுவித்த வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுப்பது தொடங்கி பல்வேறு நடைமுறையை இந்த ஏலத்தில் கையாளும். அவையனைத்தும் அணியின் சக்ஸஸுக்காக மட்டுமே. 

image

தவான்!

மெகா ஏலத்திற்கான டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான். இந்திய அணியின் சீனியர் வீரர். சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்டவர். 192 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5784 ரன்களை எடுத்துள்ள வீரர். இடது கை பேட்ஸ்மேன், தொடக்க ஆட்டக்காரர் என்பது கூடுதல் பிளஸ். 2019, 2020, 2021 என தொடர்ச்சியாக மூன்று சீசன்களிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ள வீரர். அதனால் இவருக்கு இந்த ஏலத்தில் அதிக டிமாண்ட் இருக்கும். குறிப்பாக வலது கை பேட்ஸ்மேன்களை (தொடக்க ஆட்டக்காரர்கள்) தக்க வைத்துள்ள அணிகள் இவரை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யும். 

image

டேவிட் வார்னர்!

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த டேவிட் வார்னர்,  ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்களில் ஒருவர். 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5449 ரன்களை குவித்துள்ளார். நடப்பு சீசனுக்கான ஏலத்தில் கேப்டன்களை தேடிக் கொண்டிருக்கும் அணிக்கு சரியான சாய்ஸாக வார்னர் இருப்பார். அதிரடி தொடக்க ஆட்டக்காரரான இவர் அசத்தலான ஃபீல்டரும் கூட. 2014 முதல் 2020 வரையில் இவர் விளையாடிய சீசன்களில் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 

image

டூப்ளசிஸ்!

தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த டூப்ளசிஸ் கடந்த 2011 சீசன் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கிளாசிக் பேட்ஸ்மேனான இவர் சூப்பர் மேன் போல பவுண்டரி லைனில் பந்தை கேட்ச் பிடிப்பதில் கெட்டிக்காரர். 2016 மற்றும் 17 சீசனில் மட்டும் புனே அணிக்காக விளையாடி இருந்தார். கடந்த சீசனில் 633 ரன்களை குவித்தவர். எப்படியும் சென்னை அணி இவரை ஏலத்தில் எடுத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இவரை பிக் செய்ய கடுமையான போட்டி இருக்கும். 

டிகாக், ஜேசன் ஹோல்டர், இஷான் கிஷன், நடராஜன், படிக்கல் மாதிரியான வீரர்களுக்கும் டிமாண்ட் இருக்கும். இதில் மும்பை அணி இஷான் கிஷனை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யும். 

image

ஹர்ஷல் படேல்!

வேகப்பந்து வீச்சில் மோஸ்ட் வான்டட் வீரராக உள்ளார் ஹர்ஷல் படேல். கடந்த சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியவர். ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற பிராவோவின் சாதனையை சமன் செய்தவர். தற்போது ஏலத்தில் இணைந்துள்ளார். இந்திய பவுலரான அவரை பிக் செய்ய ஒவ்வொரு அணியும் போட்டி போடும். 

இதே போல முகமது ஷமி, கம்மின்ஸ், ரபாடா, போல்ட் மாதிரியான பவுலர்களுக்கு டிமாண்ட் இருக்கும். 

சர்வதேச போட்டிகளில் விளையாடாத Uncapped வீரர்களில் ஆவேஷ் கான், ராகுல் திவாட்டியா, ராகுல் திரிபாதி, ஷாருக்கான், கார்த்திக் தியாகி, மஹிபால் லோம்ரோர் ஆகியோருக்கு டிமெண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தவிர சுழற்பந்து வீச்சு பவுலர்கள், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் சிலருக்கும் டிமாண்ட் இருக்கும். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்