"யோவ் ஒழுங்கா சூரியனுக்கு ஓட்டுப்போடு; இல்ல அடுத்தவேளை சாப்பாடு கிடையாது என மிரட்டுங்கள். உங்களுக்கு தெரியாத மிரட்டலா? நானும் என் வீட்டுக்காரம்மாவுக்கு பயந்துதான் இருக்கிறேன்" என குடும்பத் தலைவிகள் இடையே அமைச்சர் பொன்முடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் இன்று முதல்கட்டமாக 21 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில், உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பரப்புரையை மேற்கொண்டார்.
விழுப்புரம் நகராட்சி ஐந்தாம் வார்டு எருமணந்தாங்கள் பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நந்தா நெடுஞ்செழியன் என்பவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, குடும்பத் தலைவிகள் மத்தியில் திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து உங்கள் பகுதியின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
பெண்களைப்போல வாக்கு சேகரிப்பில் ஈடுபட முடியாது என புகழாரம் சூட்டிய அவர், குடும்பத்தில் உள்ள அனைவரையும் கட்டாயம் திமுகவிற்கு வாக்களிக்க செய்யவேண்டும்; கணவன்மார்கள் அப்படி இப்படி இருந்தாலும், யோவ் ஒழுங்கா சூரியனுக்கு ஓட்டுப் போடு; இல்ல அடுத்த வேளை சாப்பாடு கிடையாது என மிரட்டுங்கள். உங்களுக்கு தெரியாத மிரட்டலா? நானும் என் வீட்டுக்காரம்மாவுக்கு பயந்துதான் இருக்கிறேன் என பேசி வாக்குகளை சேகரித்தார்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix