Published : 09,Feb 2022 03:33 PM

ஒரே ஓவரில் ஆட்டமிழந்த விராட், பண்ட் - சரிந்த அணியை மீட்கப் போராடும் ராகுல், சூர்யகுமார்

India-versus-West-Indies-second-ODI-india-loses-3-wickets-in-quick-session----

இந்திய கிரிக்கெட் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 

image

கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் 5 ரன்கள் எடுத்து அவுட்டானார். விக்கெட் கீப்பர் பண்ட் மற்றும் விராட் கோலி, ஸ்மித் வீசிய 12-வது ஓவரில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இருவரும் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினர். இந்திய மண்ணில் கோலிக்கு இது 100-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியாகும். இந்தியா 43 ரன்கள் எடுத்த போது 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

image

அதனால் சரிவிலிருந்த அணியை கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் மீட்கும் நோக்கில் களத்தில் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த போட்டியை ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் நேரடியாக பார்த்து வருகின்றனர்.  

26 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 32 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 24 ரன்களும் எடுத்து நிதானமாக விளையாடி வருகின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்