
ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் நகரை தலைமையிடமாக கொண்டு உருவாகியுள்ள அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. CVC கேபிடல் பார்ட்னர்ஸ் குழுமம் இந்த அணியின் உரிமையாளராக உள்ளது. ஹர்திக் பாண்ட்யா இந்த அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.
அந்த அணிக்கு ‘குஜராத் டைட்டன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. வரும் 12 மற்றும் 13-ஆம் தேதி மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அணியின் பெயரை வெளியிட்டுள்ளது அகமதாபாத்.
ரஷீத் கான் மற்றும் ஷூப்மன் கில் இந்த அணியில் விளையாட உள்ளனர். அகமாதாபாத் அணி 52 கோடி ரூபாயை இந்த ஏலத்தில் செலவிட உள்ளது.