Published : 30,Aug 2017 02:36 AM
பேரறிவாளனை முழுமையாக விடுவிக்க வேண்டும் - திருமாவளவன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தார்.
வேலூர் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற திருமாவளவன், உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நன்னடத்தை அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், அதிமுகவில் பிளவு ஏற்படுத்தி பாரதிய ஜனதாக தமிழகத்தில் காலுன்ற முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.