Published : 08,Feb 2022 10:31 PM
குளிர்கால ஒலிம்பிக்: தங்கம் வென்ற 19 வயது சீன பெண்.. வாழ்த்து மழையில் ஸ்தம்பித்த ட்விட்டர்

சீன தேசத்தில் 2022 குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற சீனாவை சேர்ந்த 18 வயது வீராங்கனை ஐலின் Gu (Eileen Gu), பிக் ஏர் ஈவெண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அவரது வெற்றியை சீன மக்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து சொல்லி கொண்டாடி வருகின்றனர். அதனால் ட்விட்டர் தளம் தற்காலிகமாக ஸ்தம்பித்துள்ளதாக (கிராஷ்) தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ailing Eileen Gu wins #Gold in the Women’s #FreestyleSkiing Big Air Final!
— Olympics (@Olympics) February 8, 2022
What an incredible last jump to win it all!#Beijing2022
அமெரிக்காவில் பிறந்த அவர் சீன நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங்கில் தேர்ந்த அவர் ஹால்ஃப் பைப், ஸ்லோப்ஸ்டைல் மற்றும் பிக் ஏர் பிரிவில் விளையாடி வருகிறார். தற்போது பிக் ஏரில் அவர் தங்கம் வென்றுள்ளார். மொத்தம் 188.25 ஸ்கோர்களை எடுத்து தனது முதல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார் அவர்.
“என்னால் இதை நம்ப முடியவில்லை. இது எனது வாழ்வின் சிறந்த, மகிழ்ச்சியான தருணம் என சொல்வேன்” என தெரிவித்துள்ளார் ஐலின்.
இவர் மாடலாகவும் மாடலிங் துறையில் செயல்பட்டு வருகிறார். பல்வேறு இதழ்களில் இவரது புகைப்படத்தை அட்டைப்படங்களாக வெளிவந்துள்ளதாக தெரிகிறது.