Published : 08,Feb 2022 09:27 PM

ஐபிஎல் மெகா ஏலம்: அணிகளின் கட்டமைப்பு முதல் கேப்டன், வீரர்கள் தேர்வு வரையிலான பின்னணி!

How-Various-Franchise-team-owners-going-to-build-up-their-team-from-the-Upcoming-Mega-IPL-auction-and-select-players--

எதிர்வரும் 12 மற்றும் 13-ஆம் தேதி அன்று பெங்களூருவில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த முறை பத்து அணிகள் ஏலத்தில் பங்கேற்க உள்ளன. இதில் எந்த வீரரை தங்கள் அணியில் சேர்க்கலாம் என்ற கணக்குகளை கூட்டி கழித்து சரி பார்த்து வருகின்றனர் சம்பந்தப்பட்ட அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள். 

image

ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் நான்கு வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என முன்னர் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஏற்கனவே விளையாடிய 8 அணிகள் அறிவித்திருந்தன. புதிதாக சேர்ந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அகமதாபாத் அணி தலா மூன்று வீரர்களை தக்க வைத்துள்ளன. 

ஏலத்தில் எத்தனை வீரர்கள் பதிவு செய்துள்ளனர்?

மொத்தம் 590 கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். அதில் 228 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தங்கள் நாட்டுக்காக விளையாடி உள்ளார்கள். 355 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்கள். 7 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இணை உறுப்பினர்களாக உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள். 

image

48 வீரர்கள் தங்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் என சொல்லி பதிவு செய்துள்ளனர். 20 பேர் 1.5 கோடி என்றும், 34 பேர் 1 கோடி என்றும் குறைந்தபட்ச அடிப்படை விலை என சொல்லியுள்ளனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துள்ள வீரர்கள் விவரம்!

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலி என நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது சென்னை அணி. 

ஃப்ரான்சைஸ் உரிமையாளர்கள் அணியை கட்டமைப்பது எப்படி?

ஐபிஎல் லீக்கை பொறுத்த வரையில் ஃப்ரான்சைஸ் அணிகள் இரண்டு வகையாக அணிகளை கட்டமைக்கின்றன. முதலாவது தங்கள் அணியின் கேப்டனை சார்ந்து அணியை கட்டமைக்கிறது. தோனி, ரோகித் மாதிரியான கேப்டன்களை சார்ந்தே சென்னை மற்றும் மும்பை அணிகள் கட்டமைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் இதே பாணியை பின்பற்றி உள்ளன. 

image

மற்றொரு வகையில் கள வியூகங்கள், வீரர்களின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அணி கட்டமைக்கப்படுகிறது. இதில் பயிற்சியாளர், வழிகாட்டி, மூத்த கிரிக்கெட் வீரர்களின் ஆலோசனைகள் அதிகம் இருக்கும். 

image

கேப்டன் கார்னர்!

சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், லக்னோ, ஹைதராபாத், ராஜஸ்தான் மாதிரியான அணிகள் தங்கள் அணியின் கேப்டனை டிக் செய்துவிட்டன. கொல்கத்தா, பெங்களூர் மற்றும் பஞ்சாப் மாதிரியான அணிகள் கேப்டனை தேர்வு செய்ய வேண்டி உள்ளது. 

இந்த மெகா ஏலத்தில் டேவிட் வார்னர், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் மோர்கன் என கேப்டன்சி திறன் கொண்டுள்ள இந்த மூன்று வீரர்களை தங்கள் அணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை அந்த அணிகள் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

image

சுழற்பந்து வீச்சாளர்கள்!

சாஹல், க்ருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ராகுல் சாஹர் மாதிரியான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த ஏலத்தில் டிமெண்ட் கொஞ்சம் அதிகம் இருக்கும். இதில் சாஹலை மீண்டும் பெங்களூர் அணி ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. 

image

காஸ்ட்லி வீரர்கள்!

ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ள மெகா ஏலத்திற்கான வீரர்களின் பட்டியலில் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களில் அஷ்வின், போல்ட், கம்மின்ஸ், டிகாக், தவான், டூப்ளசிஸ், ஷ்ரேயஸ் ஐயர், ரபாடா, முகமது ஷமி மற்றும் டேவிட் வார்னர் உள்ளனர். இந்த பத்து வீரர்கள்தான் முதல் செட்டில் ஏலம் விடப்பட உள்ளார்கள். இவர்களது அடிப்படை விலை 2 கோடி. ஐபிஎல் மற்றும் டி20 பார்மெட் கிரிக்கெட்டில் விளையாடிய நீண்ட அனுபவம் இவர்களுக்கு உண்டு. 

இதில் டூப்ளசிஸ் சென்னை அணி பிக் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. அஷ்வினும் மேட்ச் வின்னராக ஜொலிப்பவர். தவான், டிகாக் தொடக்க வீரர்கள் தேவைப்படும் அணிக்காக விளையாடுவார்கள். போல்ட், கம்மின்ஸ், ரபாடாவுக்கும் கடுமையான போட்டி இருக்கும். 

image

சர்ப்ரைஸ் பிக்!

உள்நாட்டு கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் வீரர்களுக்கு இந்த முறை ஏலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்க அணிகள் முயற்சி செய்யும். அதே போல அண்டர்-19 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கும் டிமெண்ட் இருக்கும். ஷாருக்கான், யாஷ் தல் மாதிரியான வீரர்களுக்கு கொஞ்சம் டிமெண்ட் இருக்கும். இந்திய அணியில் தற்போது இடம் பெற்று விளையாடி வரும் வீரர்கள் பலர் ஐபிஎல் கிரிக்கெட்டை விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதே போல புவனேஷ்வர் குமார், சுரேஷ் ரெய்னா, ரஹானே, புஜாரா மாதிரியான மூத்த வீரர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீசாந்த் கூட இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளார். மறுபக்கம் இங்கிலாந்து அணி வீரர்களான ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் நோக்கில் மெகா ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்யவில்லை. 

இந்த ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 72 கோடி ரூபாயை தன்வசம் வைத்துள்ளது. குறைந்தபட்சமாக டெல்லி அணி அணி 47.5 கோடி ரூபாயை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்