Published : 08,Feb 2022 03:51 PM
“ஷாருக்கானா? அப்படினா யாரு? எனக்கு தெரியாதே!” - அனுபவங்களை பகிர்ந்த ஐபிஎல் ஏலதாரர் மேட்லி!

ஐபிஎல் மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதில் எந்த வீரரை தங்கள் அணியில் சேர்க்கலாம் என்ற கணக்குகளை கூட்டி கழித்து சரி பார்த்து வருகின்றன பத்து ஃபிரான்சைஸ் அணிகள். ஏலத்தின் போது வீரர்களின் பெயரை கெத்தாக அறிவித்து அவர்களை ஏலத்தில் விடும் பணியை முன்னதாக கவனித்து வந்தவர் ரிச்சர்ட் மேட்லி.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த அவர் ஐபிஎல் முதல் சீசனுக்கான ஏலத்தின் போது நடந்த மறக்க முடியாத தருணத்தை பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் தனது யூடியூப் பக்கத்திற்காக பேட்டி எடுத்திருந்தார்.
“முதல் சீசனுக்கான ஏலத்தின் போது கொல்கத்தா அணியின் மேசையை திறலானவர்கள் சூழ்ந்து இருந்ததை கவனித்திருந்தேன். ஏலம் முடிந்தவுடன் பத்திரிகையாளர் ஒருவர் என்னை அணுகினார். ஷாருக்கானுடன் இருந்த அனுபவத்தை எப்படி பார்க்கிறீர்கள் என அவர் என்னிடம் கேட்டிருந்தார். அப்போது ஷாருக்கான் யார் என கேட்டு தெரிந்துக் கொண்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு அவர் யார் என்று அப்போது தெரியாது. பாலிவுட் உலகம் எனக்கு அப்போது புதிதாக இருந்தது” என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் மேட்லி.