Published : 29,Aug 2017 05:09 PM
“நான் தூண்டிவிட்டிருந்தால்...”: நாஞ்சில் சம்பத் முற்றுகை விவகாரத்தில் தமிழிசை விளக்கம்

நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட தொண்டர்களை தான் தூண்டி விடவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவ்வாறு தூண்டி விட்டிருந்தால் பிரச்னை இதோடு நின்றிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக தலைவர்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணத்தை நாஞ்சில் சம்பத் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். தங்களுக்கு வன்முறை அரசியலில் விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தூண்டுதலால் நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தனது புகாரில் கூறியிருந்தார்.