Published : 08,Feb 2022 01:08 PM
மாநகராட்சி மக்கள் நீதி மய்யமுடையது! - வாசகர்களின் ‘வாவ்’ கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 7-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘திமுக Vsஅதிமுக... கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பரப்புரை’ மக்களின் மனதை வெல்வது யார்? எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.
ஆளுங்கட்சி மீது மக்களின் மனம்:
1)உரிமைத்தொகை 1000 என்ன ஆனது?
2)நீட் ரத்து ரகசியத்தை சொல்லுங்க?
3)கொரோனா பேரிடர் காலத்தில் இப்படி ஒரு பொங்கல் பரிசா?
எதிர்க்கட்சி மீது மக்களின் மனம்:
1)எதிர்க்கட்சி வழக்குகளுக்கு பயப்படலாமா?
2)66எம்எல்ஏகள் யானை பலம் இல்லையா?
3)கட்சி காப்பாற்றப்படுமா?