Published : 07,Feb 2022 05:55 PM

அவதார் வடிவில் மணமக்கள்; மெட்டாவெர்ஸில் திருமண வரவேற்பு விழா-அசத்திய தமிழக தம்பதி : வீடியோ

Tamil-Nadu-couples-Metaverse-Wedding-Reception-and-watch-the-video-here-Technology--

தமிழகத்தை சேர்ந்த புது மாப்பிள்ளை தினேஷ் மற்றும் புது மணப்பெண் ஜனக நந்தினியும் தங்களது திருமண வைபவத்தை தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் புதிய தொழில்நுட்பத்தையும் ஒரே சேர சேர்த்த கலவையாக நடத்தி முடித்துள்ளனர். இந்த திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. தங்கள் திருமணத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் கிராமத்திலும், வரவேற்பு விழாவை மெட்டாவெர்ஸ் தளத்திலும் அரங்கேற்றி உள்ளனர். ஆசியாவின் முதல் மெட்டாவெர்ஸ் வரவேற்பு விழா என இது அறியப்படுகிறது.

image

இந்த மெட்டாவெர்ஸ் வரவேற்பு நிகழ்வை TardiVerse என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் சுமார் ஒரு மாத கால உழைப்பில் டிசைன் செய்துள்ளது. இந்த வரவேற்பு நிகழ்வில் விருந்தினர்களின் அவதார், மணமக்களின் அவதார் மற்றும் மணமகள் ஜனக நந்தினியின் காலம் சென்ற தந்தையின் அவதார் முதலியவை டிசைன் செய்யப்பட்டுள்ளன. 

image

“கடந்த ஏப்ரலில் மறைந்த ஜனக நந்தினியின் அப்பா எங்களை மெட்டாவெர்ஸில் மட்டுமே வாழ்த்த முடியும்” என தெரிவித்துள்ளார் மணமகன் தினேஷ். இந்த வரவேற்பு நிகழ்வில் இன்னிசை கச்சேரி கூட சென்னையிலிருந்து மெட்டாவெர்ஸ் தளத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது.  

பிளாக்செயின், ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை ஒரே புள்ளியில் ஒருங்கிணைக்கும் ஒரு தளம்தான் மெட்டாவெர்ஸ். இந்த தளத்தில் பயனர்கள் தங்களது டிஜிட்டல் 3டி அவதாரங்களில் லைவாக சென்று மற்ற பயனர்களுடன் உரையாடலாம்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்