தமிழர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி: ஜல்லிக்கட்டு குறித்து சிம்பு பெருமிதம்

தமிழர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி: ஜல்லிக்கட்டு குறித்து சிம்பு பெருமிதம்
தமிழர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி: ஜல்லிக்கட்டு குறித்து சிம்பு பெருமிதம்

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்தது தமிழர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகக் கருதுவதாக நடிகர் சிம்பு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சியாக மாறிய ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்தில் மக்களில் ஒருவனாகப் பங்கெடுத்ததில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த அறவழிப்போராட்டத்தில் இறுதியில் வன்முறை வெடித்தது துரதிருஷ்ட வசமானது என்று குறிப்பிட்டுள்ள சிம்பு, தமிழக கோரிக்கைகளையும் நிறைவேற்ற முன்வந்த முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்ததை நம் தமிழர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகப் பார்க்கிறேன்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com