Published : 06,Feb 2022 09:29 PM

புதிய மாடல் கேமராக்களை அறிமுகம் செய்ய GoPro திட்டம்

GoPro-plans-to-expand-its-Camera-Line-Up

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான GoPro சர்வதேச அளவில் அதன் தயாரிப்பான ஆக்ஷன் கேமராக்களுக்கு பெயர் பெற்ற நிறுவனமாகும். தற்போது ஹீரோ மற்றும் மேக்ஸ் கேமராக்களை அந்நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வரும் ஆண்டில் மேலும் இரண்டு மாடல் கேமராக்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாம். 

image

இதனை GoPro நிறுவனர் நிக் வூட்மேன் உறுதி செய்துள்ளார். பல்வேறு விதமான பயனர்களை கவருவதற்காக இந்த ஏற்பாடு என அவர் தெரிவித்துள்ளதாக தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் Verge தெரிவித்துள்ளது. 

இந்த புதிய கேமராக்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. இருந்தாலும் ஹீரோ மற்றும் 360 கேமராக்களை காட்டிலும் கூடுதலான பயன்பாட்டு தேவையை விரும்புபவர்களுக்கு இந்த புதிய கேமராவை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்