Published : 06,Feb 2022 09:01 PM
"நீட் விவகாரத்தில் அதிமுக மீது திமுக வீண்பழி சுமத்துகிறது" - எடப்பாடி பழனிசாமி
நீட் விவகாரத்தில் தங்கள் மீது திமுக வீண்பழி சுமத்துவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்ததாக விமர்சித்தார்.
முன்னதாக, சேலம் மாவட்டம் பெரிய சோரகை பகுதியில் உள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கினார்.