Published : 06,Feb 2022 08:29 PM

வி.ஆர் வெர்ஷன் பிரவுசரை நிறுத்துகிறது மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ்

Mozilla-Firefox-shuts-down-its-VR-version-Browser-Firefox-Reality

டிஜிட்டல் டிவைஸ் மூலம் பல்வேறு இணையதள பக்கங்களில் நாம் உலவ உதவுவது வெப் பிரவுசர்கள்தான். அதில் முக்கியமான பிரவுசர்களில் மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸும் ஒன்று. சுருக்கமாக ஃபயர்ஃபாக்ஸ் என அறியப்படுகிறது. தற்போது ஃபயர்ஃபாக்ஸ் தனது விர்ச்சுவல் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி பிரவுசரான ஃபயர்ஃபாக்ஸ் ரியாலிட்டி  பிரவுசரை, ஷட் டவுன் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த பிரவுசரை மீண்டும் வேறொரு பெயரில் லான்ச் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Wolvic என்ற பெயரில் புதிய வி.ஆர் பிரவுசரை ஃபயர்ஃபாக்ஸ் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் Verge. 

கடந்த 2018 வாக்கில் ஃபயர்ஃபாக்ஸ் ரியாலிட்டி அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில வாரங்களில் மொஸில்லா இந்த பிரவுசரை, ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்