
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைமேடையின் விளிம்பில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த பயணியை சிஐஎஸ்எப் வீரர் ஓடிச் சென்று மீட்ட காட்சி வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள சதாரா மெட்ரோ நிலையத்தில் செல்போனில் வீடியோவை பார்த்துக்கொண்டே நடந்து வந்த ஷைலேந்தர் மேத்தா என்ற பயணி நடைமேடையின் விளிம்பில் இருந்து கீழே விழுந்தார். எதிர்ப்புற நடைமேடையில் வந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்து அந்தப் பயணியைத் தூக்கி நடைமேடையில் ஏற்றி விட்டார்.
மெட்ரோ ரயில் வரும்முன் பயணியை விரைந்து மீட்ட இந்தக் காட்சியை சிஐஎஸ்எப் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.