Published : 29,Aug 2017 01:11 PM
ஓபிஎஸின் துணை முதல்வர் பதவிப் பிரமாணத்தை எதிர்த்து வழக்கு

தமிழக துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் என்பது அரசியலமைப்பு சார்ந்த பதவி இல்லை என்று வழக்கறிஞர் வீ.இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவில் துணை பிரதமராக பதவி வகித்தவர்கள் நியமனம்தான் செய்யப்பட்டனர் என்றும், பதவிப் பிரமாணம் செய்யப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் தமிழக தலைமை செயலாளரும், ஓ.பன்னீர்செல்வமும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மனு மீதான விசாரணை ஓரிரு நாளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.