நீட் தேர்வு தொடர்பாக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மீண்டும் பொய்யைச்சொல்லி பொதுமக்களை ஏமாற்ற துடிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு திமுக ஆதரவளித்த காலக்கட்டத்தில்தான் திமுக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு தடை வாங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கும் சென்று நீட் தேர்வு செல்லாது என்று 2013ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டதாகவும், அதன்பிறகு நீட் தேர்வே ஒழிக்கப்பட்டதாகவும் துரைமுருகன் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் வக்காலத்து வாங்கும் மத்திய பாரதிய ஜனதா அரசுதான் நீட் தேர்வு கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றதை இன்றைக்குள்ள சூழலில் ஓ.பன்னீர்செல்வம் மறந்துவிட்டது ஏனோ என்று துரைமுருகன் வினவியுள்ளார். தமிழ்நாடு மக்களின் மீது, சட்டமன்றத்தின் இறையாண்மை மீது, மாணவர் சமுதாயத்தின் மீது அக்கறை இருந்திருந்தால், அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் துடிதுடித்து அதிமுக பங்கேற்றிருக்க வேண்டுமல்லவா? என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் நீட் தேர்வினை செயல்படுத்தி மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மீண்டும் பொய்யைச்சொல்லி பொதுமக்களை ஏமாற்ற துடிப்பதாக துரைமுருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai