Published : 05,Feb 2022 03:34 PM

”எங்களுக்கு வேறுவழியில்லை; இவர்தான் ஓப்பனிங் இறங்குவார்”-வீரரின் பெயரை அறிவித்தார் ரோகித்!

Indian-Cricket-Team-skipper-Rohit-Sharma-named-the-opener-to-open-the-innings-along-with-him-against-West-Indies-in-the-first-ODI----------

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் தன்னுடன் தொடக்க வீரராக களம் இறங்கும் வீரர் யார் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா. 

image

கே.எல்.ராகுல் அணியுடன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் தவானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள மயங்க் அகர்வால் குவாரன்டைனில் இருக்கிறார். இந்நிலையில் மற்றொரு தொடக்க வீரர் யார் என்பதை ரோகித் அறிவித்துள்ளார். 

“எங்களுக்கு உள்ள ஒரே ஆப்ஷன் இஷான் கிஷன் மட்டுமே. அதனால் அவர் என்னுடன் முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்குவார்” என ரோகித் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் 4 வீரர்கள் மற்றும் 3 நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில தினங்களுக்கு உறுதி செய்யப்பட்டது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்