'கடந்த இரு வாரங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 50% குறைந்துள்ளது' - மத்திய அரசு

'கடந்த இரு வாரங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 50% குறைந்துள்ளது' - மத்திய அரசு
'கடந்த இரு வாரங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 50% குறைந்துள்ளது' - மத்திய அரசு

ஜனவரி 21 முதல் பிப்ரவரி 3 வரையிலான இரண்டு வாரங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 3,47,254-இலிருந்து 1,72,433 ஆக 50 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏறிய வேகத்தில் இறங்கி வருகிறது. கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம், இரண்டாவது அலையை விட பெரிதும் குறைவு. ஓமைக்ரான் ஏற்பட்டு இருக்கும் பலருக்கு லேசான, காய்ச்சல் அறிகுறிகள் மட்டுமே உள்ளன. இதனால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இல்லை. பலர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்கள். இந்தியாவில் இன்று (பிப்.3) 1.72 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது ஜனவரி 21 அன்று பதிவான பாதிப்பில் பாதி அளவாகும். 

இதுகுறித்து சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், 'கொரோனா தினசரி பாதிப்பு சரிவடைந்து வருகிறது. அலை மற்றும் உச்சம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை. இன்னும் சில பகுதிகளில் தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா மேலாண்மை உத்திகள் இன்னும் செயல்படுத்தப்பட வேண்டும்'' என்றார்.

ஜனவரி 21 முதல் பிப்ரவரி 3 வரையிலான இரண்டு வாரங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 3,47,254 இலிருந்து 1,72,433 ஆக 50 சதவீதம் குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 95.14 சதவீதமாக உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 10.99 சதவீதம் ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 12.98 சதவீதமாக உள்ளது என்று சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: இந்தியா: 1.72 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 1,008 உயிரிழப்பு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com