Published : 03,Feb 2022 04:32 PM

திமுக ஆட்சியின் தோல்வியை மறைக்கவே சமூக நீதி கூட்டமைப்பு - இபிஎஸ் விமர்சனம்

Social-Justice-Federation-to-cover-up-the-failure-of-the-dmk-regime--EPS-review

கடந்த 9 மாதங்களாக தன்னுடைய ஆட்சி ரீதியான தொடர் தோல்விகளை மறைக்கவே முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி கூட்டமைப்பு என்னும் போர்வைக்குள் நுழைந்திருக்கிறார் என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியவர் எம்.ஜி.ஆர். அதனை 69 சதவீதமாக உயர்த்தி சட்ட பாதுகாப்பு தந்தவர் ஜெயலலிதா.

image

ஆனால், சமூக நீதிக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாத இன்றைய முதல்வர் சமூக நீதி கூட்டமைப்பை ஏற்படுத்தி 37 தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியதின் உள்நோக்கம் என்ன? 2024 நாடாளுமன்ற தேர்தலில் பல மாநில கட்சி தலைவர்களுக்கு பிரதமராகும் கனவு வந்துள்ளது. அதே எண்ணத்தில் இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளாரோ என்று எண்ண தோன்றுகிறது.

ஏற்கனவே நீட் விலக்கு தொடர்பாக 7 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். அதற்கு இதுவரை எந்த மாநில முதல்வராவது பதில் கடிதம் அனுப்பினார்களா?. தன்னுடைய ஆட்சியின் தோல்வியை மறைக்க சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் காகிதப்பூ நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படவேண்டும்" என தெரிவித்துள்ளார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்