[X] Close

அமெரிக்கா புகார்: பாகிஸ்தான் எதிர்ப்பு

US-complains--anti-Pakistan

அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. பயங்கரவாதிகளின் புகழிடமாக பாகிஸ்தான் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் சாஹித் அப்பாஸி செல்வதற்கு முன்பாக இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தை மற்றும் தலைவர்களின் பயணத்தை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க அமைச்சரின் இன்றைய பாகிஸ்தான் பயணம் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் அமெரிக்கப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், அதனை எதிர்கொள்ளும் விதமாக சிறப்புக் குழுவையும் அமைத்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close