[X] Close

போதையில் பசுமாட்டை துன்புறுத்திய இளைஞர் கைது

Youth-arrested-for-cow-torture

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பசுமாட்டை துன்புறுத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 


Advertisement

பெரமச்சூரில் அல்லிமுத்து என்பவர் கறவை மாடுகளை வளர்த்து வருகிறது. அவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை போதையிலிருந்த கார்த்திக் என்ற இளைஞர் தாக்கியுள்ளார். மாட்டின் பால் கறக்கும் காம்பை பிளேடால் அறுத்தும் அவர் துன்புறுத்தியுள்ளார். அதை தட்டிக்கேட்ட மாட்டின் உரிமையாளர் அல்லுமுத்துவையும் அங்கிருந்த இளைஞர் மிரட்டியுள்ளனர். 

இதுகுறித்து அல்லிமுத்து கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக்கை கைது செய்த காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பால் காம்பு அறுக்கப்பட்ட பசு சிலநாட்களுக்கு முன்புதான் கன்று ஈன்றது என்பதால், அதன் உடல்நிலை மிகவும் பாதிக்ப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் பசுவுக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close