Published : 01,Feb 2022 08:26 AM

உத்தரகாண்ட் மாநில தேர்தல்: இன்று முதல் பரப்புரையை தொடங்கும் பாஜக

Uttarakhand-Election-2022--BJP-to-launch-mega-poll-campaign-from-today

உத்தரகாண்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான மெகா பரப்புரையை பாரதிய ஜனதா கட்சி இன்று முதல் தொடங்குகிறது.

இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி நேரடி மற்றும் காணொலி பரப்புரைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துள்ளோம். நாளை முதல், எங்கள் நட்சத்திர பிரச்சாரகர்கள் அனைவரும் நேரடி மற்றும் காணொலி முறையில் பொது பேரணிகளில் உரையாற்றத் தொடங்குவார்கள். டிஜிட்டல் பிரச்சாரத்துக்காக ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 15 இடங்களில் பிரமாண்டமான எல்இடி திரைகள் நிறுவப்பட்டுள்ளன, இதன் மூலம் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் காணொலி வாயிலான பேச்சினை மக்கள் கேட்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் உத்தரகாண்ட் தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்கின்றனர். உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கான நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பட்டியலை பாஜக கடந்த வாரம் வெளியிட்டது. இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, நிதின் கட்கரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரும் இங்கு பரப்புரை செய்கிறார்கள்.

image

70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறுகிறது, முடிவுகள் மார்ச் 10-ஆம் தேதி அறிவிக்கப்படும். 2017-ல் உத்தரகாண்டில் பாஜக 57 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை 60க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்