Published : 31,Jan 2022 07:59 PM

அரசின் உதவியால் நனவான கனவு - மருத்துவம் படிக்கச் செல்லும் ஊரின் முதல் மாணவி தங்கப்பேச்சி!

கடந்தாண்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தும், பண வசதியின்றி படிப்பை கைவிட்ட அரசுப் பள்ளி மாணவிக்கு, இந்தாண்டு அரசின் உதவியால் மருத்துவக் கனவு நனவாகியுள்ளது.

விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த தங்கப்பேச்சி, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று, 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததால், கல்விக் கட்டணம் செலுத்த வசதியின்றி, மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார்.

image

இது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியான நிலையில், தனியார் பயிற்சி நிறுவனத்தில், நீட் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. நன்கு பயிற்சி பெற்று, மீண்டும் நீட் தேர்வு எழுதி, தற்போது 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. உள் ஒதுக்கீட்டின் கீழ் சேறும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்பதால், தற்போது தங்கப்பேச்சியின் மருத்துவ ஆசை நிறைவேறவுள்ளது.

ஊரின் முதல் மருத்துவர் என பெருமை கொள்வதோடு, மேலும் பலரை மருத்துவராக்க ஊக்கமாக இருந்த தங்கப்பேச்சியை கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். கடந்தாண்டு வாய்ப்பை இழந்தாலும், இந்தாண்டு வாகை சூடிய தங்கப்பேச்சி, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கும் பலருக்கும் உந்துகோலாக இருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்