Published : 30,Jan 2022 10:29 AM
உதகை: தேர்தல் பணியின் போது பெண் காவலரிடம் சில்மிஷம் - துணை வட்டாட்சியர் கைது

உதகையில் தேர்தல் பணியில் பறக்கும் படை பணியிலிருந்த பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உதகை அருகே உள்ள அதிகரட்டி பகுதியில் பறக்கும் படை குழு பணியில் இருந்தபோது, பெண் காவலரிடம் துணை வட்டாட்சியர் பாபு என்பவர் சில்மிஷம் செய்துள்ளார்.
இதையடுத்து பெண் காவலர் உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, வட்டாட்சியர் பாபுவை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பெண் காவலரிடம் சில்மிஷம் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டத்தின் கீழ் கைது செய்து குன்னூர் சிறையில் துணை வட்டாட்சியர் பாபு அடைக்கப்பட்டார்.
தேர்தல் பணியின் போது பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் உதகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.