தனது மகளுடன் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ‘புஷ்பா’ படத்தின் டயலாக்கை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனுடன் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ‘புஷ்பா’ உலகம் முழுக்க 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
குறிப்பாக, ‘புஷ்பா’ மூலம் பாலிவுட்டில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளார்கள். இதனாலேயே, ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தினை இந்தியில் டப்பிங் செய்து சமீபத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘புஷ்பா’ பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இன்ஸ்டா ரீல்ஸிலும் டப்ஸ்மாஷ் செய்தும் வீடியோக்கள் செய்து வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில், ஹர்திக் பாண்டியா ‘ஸ்ரீவள்ளி’ பாடலுக்கு தனது பாட்டியுடன் நடனமாடியிருந்தது செம்ம வைரல் ஆனது.
அதேபோல, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பா கெட்டப்பில் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் வைரலான நிலையில், தற்போது மீண்டும் அவரது மகளுடன் ‘புஷ்பா’ ஃபேமஸ் டயலாக்கான ‘புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைச்சீங்களா? ஃபயரு” என்று ஆக்ஷனுடன் பேசும் டப்ஸ்மாஷ் வீடியோவை மகளுடன் செய்து வெளியிட்டிருக்கிறார். அதற்கு, அல்லு அர்ஜுனும் ‘ஃபயர்’ சிம்பளை கமெண்ட்டாகப் போட்டு தெறிக்கவிட்டிருக்கிறார். இந்த வீடியோவுக்கு 5 லட்சம் பேருக்குமேல் லைக்குகளைக் குவித்துள்ளார்கள்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!