தமிழகத்தில் ஒரேநாளில் 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒரேநாளில் 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் ஒரேநாளில் 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 6வது நாளாக இன்றும் குறைந்துள்ளது.

நேற்றுவரை 2,13,534 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. தமிழகத்தில் நேற்று 28,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48 பேர் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 24 பேரும், அரசு மருத்துவமனைகளில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,460 ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 28,156 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,29,961 என்றாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com