தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகம் முழுவதும் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் 12,838 பதவியிடங்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர், காலை 10 மணி முதல் வேட்புமனுக்களை அளிக்கலாம். நாளையும் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நிகழ்வுகளை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்திட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் 1000 ரூபாயும், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் 2,000 ரூபாயும், மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் 4,000 ரூபாயும் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், இதில் பாதியை செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 4-ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7-ஆம் தேதி கடைசி நாள். பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து, அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தி உள்ளார். காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், மாநில தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வேட்புமனுத் தாக்கல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், பறக்கும் படை கண்காணிப்பு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது உள்ளிட்டவை குறித்து மாநில தேர்தல் ஆணையர் அறிவுரைகளை வழங்கினார்.
சமீபத்திய செய்தி: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு: விடிய விடிய போராட்டம்
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!