பிப்ரவரி 1 முதல் வழிபாட்டு தளங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு விதிக்கப்பட்ட தடைகள் ரத்து

பிப்ரவரி 1 முதல் வழிபாட்டு தளங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு விதிக்கப்பட்ட தடைகள் ரத்து
பிப்ரவரி 1 முதல் வழிபாட்டு தளங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு விதிக்கப்பட்ட தடைகள் ரத்து

பிப்ரவரி 1 முதல் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் அனைத்து நாட்களின்போதும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறநிலையத்துறை சார்பில் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தளங்களிலும் தரிசனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக  இவையன்றி கொரோனா பொதுமுடக்கம் தொடர்பாக தமிழக அரசு சில முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம், பிப்ரவரி 15ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளிகள் அனைத்திலும் 1 முதல் 12 வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு பொதுமுடக்கம் நீக்கப்பட்டுள்ளது. போலவே நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com