விருதுநகரில் காதல் விவகாரத்தில் காதலனின் தாயாரை மின்கம்பத்தில் கட்டிவைத்து பெண் வீட்டார் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சக்திசிவா - புவனேஸ்வரி ஆகியோர் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சக்திசிவாவின் வீட்டிற்குச் சென்ற புவனேஸ்வரியின் தாய் சுதா மற்றும் உறவினர்கள், சக்திசிவாவின் தாய் மீனாட்சியை தரதரவென வெளியே இழுத்து வந்து, மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த காவல்துறையினர் மீனாட்சியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை தாக்கிய சுதா மற்றும் உறவினர்கள் என 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மீனாட்சியின் உறவினர்கள் மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை சமரசம் செய்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?