ஒரு குளியலறைக்கு 4 டாய்லெட்டுகள் கொண்ட விசித்திர வீடு ஒன்று அமெரிக்காவில் ரூ.3.36 கோடிக்கும் விற்பனைக்கு வந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் தெற்கு மில்வாக்கியில் இந்த வீடு அமைந்திருக்கிறது. 6 படுக்கையறைகள், இரண்டு முழு சிறப்பம்சம் கொண்ட குளியலறைகள், இரண்டு பாதிவசதி குளியறைகள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் சிறப்பம்சமே டாய்லெட்டுகள்தான். ஒன்றல்ல... இரண்டல்ல... ஒரு பாத்ரூமுக்கு 4 டாய்லெட்டுகள். அதுவும் எந்த தடுப்பும் இல்லாமல் சில இஞ்ச் இடைவெளிகளே விடப்பட்டு நாற்காலிகள் போல் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒரு குளியறையில் 4 சிங்குக்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மற்ற அறையிலுள்ள குளியலறைகள் சாதாரணமாகத்தான் உள்ளன. இந்த கம்பீரமான மில்வாக்கி வீடு 1851 ஆம் ஆண்டில் ஃபௌல் குடும்பத்தால் ஹாவ்தோர்ன் அவேயில் முதன்முதலில் கட்டப்பட்டது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த வீடு தற்போது மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் அறைகள் மிகவும் விசாலமாகவும், தளங்கள் கடினத்தன்மையுடனும், வீட்டிற்குள் குளிரின் தாக்கம் இல்லாமல் இருக்க கூரைகள் பீம் செய்யப்பட்டும் உள்ளது. குறிப்பாக இந்த வீட்டின் சமையலறை மற்றும் குளியலறைகளில் பிளம்பிங், மின்சாரம், உபகரணங்கள் போன்ற அனைத்தும் நவீன முறைக்கு ஏற்ப மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த வீட்டிற்கு அருகே வேறு வீடுகள் இல்லை. தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை கட்டியபோது அதில் 4 டாய்லெட்டுகள் இல்லை எனவும், 1920 அல்லது 1930களில் இந்த வீட்டில் வாழ்ந்த கிர்ல் ஸ்கௌட் தான் இந்த டாய்லெட்டுகளை வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!