
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17.69 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ததில் 2,85,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 11.7% அதிகமாகும். 4 கோடிக்கும் அதிகமாக தொற்று உறுதியாகி கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
கொரோனா பாதிப்பிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 665 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,91,127ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 22,23,018 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு விகிதம் 16.16 சதவீதமாக உள்ளது.