Published : 25,Jan 2022 09:37 PM

பதைபதைக்க வைக்கும் 'திக் திக்' யூ-டர்ன் - 15 லட்சம் வியூஸ் தொட்ட வீடியோவின் ஃபேக்ட் செக்!

Car-Driver-Makes-U-Turn-on-a-Narrow-Short-Road-and-this-video-goes-Viral-and-the-Fact-Check-is-here--

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமயங்களில் சில வீடியோக்கள் வைரலாகும். அப்படி வைரல் வீடியோவாக அமைந்தது குறுகிய மலை சாலையின் உச்சியில் யூ-டர்ன் அடித்த நீல நிற கார் ஒன்றின் வீடியோ. சுமார் 1.22 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் காரை லாவகமாக திருப்புகின்ற டிரைவரின் திறனை பலரும் பாராட்டியிருந்தனர். ட்விட்டர் தளத்தில் மட்டும் சுமார் 1.5 மில்லியன் வியூஸ்களை அந்த வீடியோ அள்ளியிருந்தது. 

 

இந்நிலையில் நெட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்திருந்தனர். சிலர் அதற்கு சூப்பரான கேப்ஷனும் கொடுத்திருந்தனர். அதில் ஒரு பயனர் ‘இந்த வீடியோ உண்மையானது தானா?’ என கேள்வி எழுப்பியிருந்தார். 

 

அவர் கேள்வி எழுப்பியதை போல என்னதான் அனுபவமிக்க ஓட்டுநராக இருந்தாலும் அதை செய்வது எளிய காரியமில்லை. இந்த நிலையில்தான் அந்த வீடியோ மலை உச்சியில் அமைந்துள்ள குறுகிய சாலையில் எடுக்கப்பட்டதை போல கேமராவில் காட்சி படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன் ஒரிஜினல் வீடியோவை ‘டிரைவிங் ஸ்கில்’ என்ற யூடியூப் தளத்தில் பகிர்ந்துள்ளனர். வேறு ஒரு ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அந்த சாலைக்கு கீழே மற்றொரு சாலை இருப்பது வீடியோவில் பதிவாகி உள்ள காட்சிகளில் தெரியவந்துள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்