[X] Close

” சட்டசபையில் ஆண்மையோடு பேசும் அதிமுகவை பார்க்க முடியவில்லை” - நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு

Nainar-Nagendran-talk-about-admk

சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசும் அதிமுகவை பார்க்க முடியவில்லை என பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''திமுக ஆட்சி காலம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது.

image


Advertisement

ஆனால், இந்த 4 ஆண்டு காலம் அவர்கள் ஆட்சி நீடிக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாது. இதற்கு பின்பு அவர்கள் ஆட்சி நீடிக்காது.

சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச கூடிய அதிமுகவை பார்க்க முடியவில்லை. 4 பேர் இருந்தாலும் சட்ட மன்றத்தில் மக்கள் பிரச்சனையை பாஜக தான் பேசுகிறது. அதிமுக எதிர்கட்சியாக இல்லை. எதிர்கட்சியாக இல்லாமல் இருந்தாலும், ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே'' என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close