[X] Close

மைக் ஆஃப் செய்திருப்பதாக நினைத்து நிருபரை தகாத வார்த்தைகளால் திட்டிய அதிபர் பைடன்!

உலகம்

biden-Caught-On-Hot-Mic-Mocking-Reporter

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர் ஒருவரை தகாத வார்த்தையால் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். நிகழ்வு முடிந்து, பத்திரிகையாளர்கள் வெளியேறும்போது, பழமை பொருந்திய சேனலான ஃபாக்ஸ் நியூஸின் நிருபர், பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, மைக் ஆஃப் செய்திருப்பதாக நினைத்த பைடன், அந்த பத்திரிகையாளரை தகாத வார்த்தையால் திட்டி முணுமுணுத்தார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதே நேரம், அறையில் இருந்த நிருபர் சத்தத்தில் பைடன் உண்மையில் என்ன சொன்னார் என்பதை கேட்க முடியவில்லை என்று ஒப்புக்கொண்டார்.

ஒரு மணி நேரத்திற்குள் நிருபரை அழைத்த பைடன், ''தனிப்பட்ட முறையில் எதுவும் கூறவில்லை நண்பா" என்று கூறியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close