[X] Close

திமுக ஆட்சியைப் பிடிக்க வழிவகுக்காதீர்: எடப்பாடிக்கு சு.சாமி அட்வைஸ்

Do-not-lead-to-DMK-rule--Subramaniswamy-for-Ettapadi

சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமாறும், திமுக ஆட்சி அமைக்க வழி வகுக்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “ஈபிஎஸ்-க்கு என்னுடைய அறிவுரை என்னவென்றால் திமுக ஆட்சியமைக்க வழி வகுக்க வேண்டாம். சசிகலாவை தலைவராக ஏற்றுக்கொண்டு, தன்னை முதலமைச்சராக்கிய அதிமுகவுக்கு உண்மையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


Advertisement

முன்னதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், டிடிவி தினகரன் அணியும் சேர்ந்து அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைப்பார்கள் என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார். நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இதை பதிவு செய்தார்.

இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி புதிய தலைமுறையிடம் பேசும்போது, “கருணாநிதி அரசியலில் இருந்து வெளியேறிவிட்டார் எனத் தெரிகிறது. ஸ்டாலின் கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் உள்ளது. அனைத்து எம்எல்ஏ-க்களும் தேர்தல் வரக்கூடாது என்று தான் நினைக்கிறார்கள். ஸ்டாலின், திமுக மீது தினகரனுக்கு வெறுப்பு கிடையாது. எனவே டிடிவி தினகரன் வெளியில் இருந்து திமுக-விற்கு ஆதரவு தர வாய்ப்பு உள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையும் இனி உயரும்” என்றார்.

இந்நிலையில் சுப்ரமணியன் சுவாமி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close