பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்தில் சுப்ரமணி (வயது 60) என்பவரது வீட்டின் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் சீட்டை துளைத்துள்ளது துப்பாக்கி குண்டு. அருகிலுள்ள துப்பாக்கிசூடு பயிற்சி மையத்தில் இருந்து துப்பாக்கி குண்டு வந்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலையிலேயே இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தற்போது தான் வெளியே தெரியவந்தாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிசூடு மையத்தில் நேற்று பயிற்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே அங்கிருந்துதான் துப்பாக்கி குண்டு வந்திருக்குமென சொல்லப்படுகிறது. ஏற்கெனவே இதுபோல் ஒருமுறை துப்பாக்கி குண்டு வீட்டில் பாய்ந்ததாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். நல்வாய்ப்பாக இந்த நிகழ்வில் சேதமேதும் ஏற்படவில்லை.
முன்னதாக கடந்த மாத இறுதியில் புதுக்கோட்டையில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தில் இருந்து இதேபோல வெளியேறிய குண்டு ஒன்று, சிறுவனொருவனின் தலையில் பலமாக தாக்கியிருந்தது. இதில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். இச்சம்பவம் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டுமொருமுறை இதேபோல நிகழ்வு ஏற்பட்டுள்ளது. நார்த்தமலையில் இருந்த அந்த துப்பாக்கி சுடும் மையம் தற்போது மூடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இன்று தமிழ்நாடு அரசு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்தி: புதுக்கோட்டை: காவலர் பயிற்சி மையத்திலிருந்து சிறுவன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி