மத்திய அரசின் பால புரஸ்கார் விருதுக்கு தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த சிறுமிகள் உள்ளிட்ட சிலரது சாதனைகள்
இந்த ஆண்டுக்கான பால புரஸ்கார் விருதுக்கு 14 சிறுமிகள் உள்பட 29 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ரிமோனா பரத நாட்டியத்தில் பல்வேறு சாதனைகளை படைத்ததாக விருதுக்கு தேர்வாகியுள்ளார். உடைந்த கண்ணாடிகள் மற்றும், மண்பானை மீது பரதம் ஆடிய சாதனை படைத்த ரிமோனா, பிரதமருடன் கலந்துரையாடும்போது, தந்தையை இழந்த தனக்கு தாயும், சகோதரரும் ஊக்கம் அளிப்பதாக கூறினார்.
அசாம், சமஸ்கிருதம், வங்காளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் பாடும் புலமை பெற்ற அசாமைச் சேர்ந்த 5 வயது சிறுவன் திரிஷ்டிஸ்மான் சக்கரவர்த்திக்கு கலை இலக்கிய பிரிவுக்கான விருது வழங்கப்படுகிறது.
ஜம்முவில் கடந்த 2018 ஆம் ஆண்டு, கடுமையான நிலவெடி தாக்குதலின்போது, பயங்கரவாதிகளிடம் தைரியமாக பேச்சுவார்த்தை நடத்தி, தனது குடும்பத்தினரை மீட்ட 12 வயது சிறுமி குருகு ஹிமாப்பிரியாவுக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் விருதுநகரைச் சேர்ந்த மருத்துவ தம்பதிகள் நரேஷ்குமார் சித்திரகலாவின் 8 வயது மகளான விஷாலினிக்கு, வெள்ள சேதங்களின் போது மக்களை பாதுகாக்கும் வகையில் பலூன் வடிவிலான மிதக்கும் வீட்டை வடிவமைத்தற்காக விருது வழங்கப்படுகிறது. 6 வயதிலேயே விஷாலினி இதற்கு காப்புரிமை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
அகர்தலாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி புபாய் சக்கரவர்த்தி கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வழங்கும் கருவியை வடிவமைத்ததற்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான ஊட்டசத்தை மெய்நிகர் வழியில் கண்டறியும் கருவியையும் இவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 14 வயது அஸ்வதா, புதைபடிமம் எனப்படும் தொல்லுயிரியல் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அரியலூர் உள்ளிட்ட இடங்களில் பல புதைபடிமங்களை கண்டறிந்ய அஸ்வதா, தனது வீட்டிலேயே சிறிய அளவிலான அருங்காட்சியத்தை வடிவமைத்துள்ளார். பள்ளிகளுக்குச் சென்று புதைபடிமங்கள் குறித்து மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் அஸ்வதாவுக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது வழங்கப்படுகிறது.
இவைதவிர calligraphy எனப்படும் கையெழுத்து முறையில் சிறந்து விளங்கியதற்காக, 13 வயது கவுரி மகேஷ்வரி மற்றும் பியோனா வாசிப்பதில் பல்வேறு சாதனைகளை படைத்த சையத் அகமது, காங்டாக் நதியில் முதலையிடம் சிக்கிய சகோதரனை மீட்ட தீரஜ்குமார் உள்ளிட்டோருக்கும் பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: சமத்துவத்தை நோக்கி படையெடுக்கும் திரைப்படங்கள் : புது ட்ரெண்டாகும் தமிழ் சினிமா - பகுதி 1
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!