இளைஞர்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
கலை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய 18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கான ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகள் தினமான நேற்று, விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 14 சிறுமிகள் உள்ளிட்ட 29 பேருடன், தேசிய பிரதமர் நரேந்திர மோடி காணொளியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர், நாட்டுக்கு உழைப்பதே முதன்மையானது என்ற சுபாஷ் சந்திரபோஸின் இலக்கை நோக்கி இளைஞர்கள் செயலாற்ற வேண்டும் என்றார்.
மேலும், உலகம் முழுவதும் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதால் நாடே பெருமை கொள்கிறது என்றார். தூய்மை இந்தியா திட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் சிறுவர்கள், தங்களை சுற்றியுள்ள மக்களிடம் உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்துமாறு ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். பால புரஸ்கார் விருதுக்கு தேர்வான 29 பேருக்கும் சான்றிதழும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: பீகார்: குழந்தைகள் மீது துப்பாக்கியால் சுட முயற்சி? - பாஜக அமைச்சரின் மகனுக்கு தர்ம அடி
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!