இந்தியாவில், கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில், இன்றும் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக, உலகை இயல்பு நிலைக்கு திரும்பவிடாமல் பல அலைகளை உருவாக்கி வருகிறது. ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று உருமாற்றம் அடைந்த நிலையில், புதிதாக கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறிப்பட்டது. இதையடுத்து மீண்டும் கொரோனா பாதிப்பு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்து வரும் நிலையில், இந்தியாவிலும் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கிடுகிடுவென பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 3,33,533 மற்றும் நேற்று முன்தின பாதிப்பான 3,37,704 -ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சத்து 43 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2, 43,495 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 49 ஆயிரத்து 335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 439 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 ,89,848 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, நாடு முழுவதும் இதுவரை 162 கோடியே 26 லட்சத்து 7 ஆயிரத்து 516 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதில், 93 கோடி பேருக்கு மேல் முதல் தவணையும், 68.4 கோடி பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. 15 முதல் 17 வயதுப் பிரிவைச் சேர்ந்த சிறார்களில், 4.19 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!