'எப்போது உங்களுக்கு திருமணம்’ என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, சமூகவலைத்தள பக்கத்தில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா அளித்த பதில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் 34 வயதான சோனாக்ஷி சின்ஹா. இவர், வளர்ந்து வரும் நடிகரான ஜஹீர் இக்பாலை பல வருடங்களாக காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி இருவரும் பொதுவெளியில் தங்களது காதலைப் பற்றி உறுதிப்படுத்தவில்லை. எனினும், கடந்த டிசம்பர் மாதம் 10-ம் தேதி ஜஹீர் இக்பாலின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த மாதிரி அருமையான மனிதரை உலகத்தில் எங்காவது பார்க்க முடியுமா என்று உருக்கமாக சோனாக்ஷி சின்ஹா பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஜஹீர் இக்பாலுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இவர்கள் இருவரும் தற்போது, ‘டபுள் எக்ஸ்.எல்.’ படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சோனாக்ஷி சின்ஹா, இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களுடன் நேற்று ‘எது வேண்டுமென்றாலும் கேளுங்கள்’ என்ற தலைப்பில் கலைந்துரையாடினார். அப்போது, ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, சோனாக்ஷி சின்ஹாவின் வித்தியாசமான பதில் வைரலாகி வருகிறது. தற்போது பாலிவுட் பிரபலங்கள் பலரும் திருமணம் செய்துகொண்டு வரும்நிலையில், ரசிகர் ஒருவர் “மேம், அனைவருக்கும் திருமணம் நடக்கிறது. நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு, சோனாக்ஷி சின்ஹா “எல்லோருக்கும்தான் கோவிட் வருகிறது? நானும் கொரோனாவை பெற்றுகொள்ள வேண்டுமா?” என்று வேடிக்காகையாக பதிலளித்தார். இந்தப் பதில் தற்போது வைரலாகி வருகிறது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix