[X] Close

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லி செல்ல திட்டம்

TTV-Dinakaran-Support-MLAs-plan-to-go-to-Delhi

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதலமைச்சர் பழனிசாமியை நீக்கக் கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்து விட்டு புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். ஆனால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுதொடர்பாக இன்னும் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவரிடமும், பழனிசாமியை நீக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கலாம் என சொல்லப்படுகிறது.

இதனிடையே பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close