Published : 21,Jan 2022 08:53 PM

பாகிஸ்தானிலிருந்து இயங்கிய 35 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு

பாகிஸ்தானிலிருந்து இயங்கிய 35 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து தவறான தகவல்களை பரப்பியதால் 35 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் 2 ட்விட்டர், 2 இன்ஸ்டாகிராம், ஒரு ஃபேஸ்புக் கணக்குகளும், 2 இணையதளங்களும் முடக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக தவறான தகவல்களை பரப்பியதாக, ஏற்கெனவே 40 யூ டியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்