ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 357 பேருக்கு கொரோனா

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 357 பேருக்கு கொரோனா
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 357 பேருக்கு கொரோனா

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கடந்த 3 நாட்களில் 357 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர். இதில், பலருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடந்த 18ஆம் தேதி 96 பேரும், 19ஆம் தேதி 152 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 101 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே 50 சதவீத பணியாளர்களுடன் பணிகள் நடைபெற்று வந்தநிலையில், தற்போது 350க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com