Published : 28,Aug 2017 06:29 AM
மணிரத்னம் மகனிடம் இத்தாலியில் திருட்டு: சுகாசினி டிவிட்டால் ஷாக்

இயக்குனர் மணிரத்னம்- சுகாசினி தம்பதிக்கு ஒரே மகன் நந்தன். சினிமாவில் ஆர்வம் இல்லாத நந்தன், அரசியலில் ஆர்வம் கொண்டவர். இவர் இப்போது தத்துவவியல் பற்றி வெளிநாட்டில் படித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சுகாசினி, ’என் மகனிடம் திருடிவிட்டார்கள். யாராவது வெனிஸ் மார்க் சதுக்கம் பக்கம் இருக்கிறீர்களா? உதவுங்கள்’ என்று கூறியிருந்தார். தொடர்ந்து அவர் பதிவிட்ட டிவிட்டால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சில மணி நேரங்களில், தன் மகன் பாதுகாப்பாக இருப்பதாகவும் உதவியவர்களுக்கு நன்றி என்றும் கூறியிருந்தார். இது பரபரப்பானது.
இதுபற்றி விசாரித்தபோது, இத்தாலியிலுள்ள பெலுன்னோ என்ற இடத்தில் நந்தனிடம் திருட்டு நடந்துள்ளது. இதையடுத்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.