Published : 20,Jan 2022 10:04 PM

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தால் 12.70 லட்சம் பேர் பலி: லான்செட் மருத்துவ இதழில் தகவல்

Antimicrobial-drug-kills-12-point-70-lakh-people-in-2019-Lancet-Medical-Journal-study-found

நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதில் கட்டுப்பாடுகள் தேவை என உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார். நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டதால், 2019 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 12 லட்சத்து 70 ஆயிரம் உயிரிழந்துள்ளதாக, பிரபல மருத்துவ இதழ் லான்செட் கூறியுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள சவுமியா சுவாமிநாதன், பெருந்தொற்று காலத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொள்வது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மனித இனத்தை காப்பது தொடர்பாக இவ்விஷயத்தில் அனைத்து துறையினர் அடங்கிய நடவடிக்கை தேவை எனவும் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்