புத்தகப் பதிப்பாளர்களுக்கும், வாசிப்பாளர்களுக்குமான திருவிழாவாக கருதப்படும் சென்னை புத்தகக் கண்காட்சி தள்ளிப்போயிருப்பது, தங்களைக் கடும் நெருக்கடியில் தள்ளியிருப்பதாக பதிப்பாளர்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் கூட வாசகர்கள் வருவது வழக்கம். இந்தாண்டு ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டிருந்த 45-வது சென்னை புத்தகக் கண்காட்சி கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால், புத்தகக் கண்காட்சியையொட்டி, புதிய புத்தகங்களை வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பதிப்பாளர்கள், கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.
மேலும், புத்தகக் கண்காட்சிக்கு 800 அரங்குகள் அமைப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பும் பறிபோயுள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவல் குறைந்தப்பின், புத்தகக் கண்காட்சி நடத்த அனுமதி கிடைக்கும் என்று பதிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். புத்தகக் கண்காட்சி தள்ளிப்போனாலும், நூலகங்களுக்கு அரசு புத்தகங்களை கொள்முதல் செய்தால், தற்காலிகமாக தங்கள் நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்பதும் பதிப்பாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. மேலும், புத்தகக் கண்காட்சி நடத்த விதிகளை உருவாக்கி கொடுத்தால், பின்பற்ற தயாராக இருப்பதாகவும், புத்தகக் கண்காட்சி நடத்தும் பபாசி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
எத்தனையோ பேரின் வாழ்க்கையில் ஒளிபாய்ச்சும் ஜன்னலாக இருக்கும் புத்தகங்கள், விற்பனையை எதிர்நோக்கி இருட்டில் காத்திருப்பது வேதனைதான். வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கில் ஆர்டர் செய்த விற்பனையாளர்கள், அரசு உரிய நேரத்தில் அனுமதி அளிக்கும் என்றும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். பதிப்பாளர்களின் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிய தலைமுறை செய்தி சேனலின் வீடியோவில் முழுமையாகக் காணலாம்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி