[X] Close

ஆசிரியை திட்டியதால் 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

The-teacher-is-scolding--student-suicide

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே ஆசிரியர் திட்டியதாக 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார். 


Advertisement

பாளையங்கோட்டை அருகேயுள்ள கோட்டூரைச் சேர்ந்த செய்யது அகமதுவின் மகள் சப்ரீன் ஹாஜிரா. வீட்டிற்கு அருகிலுள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்பு ஆசிரியை தன்னை திட்டிவிட்டதாக, சப்ரீன் வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் மாடியிலிருந்து குதித்து சப்ரீன் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் சப்ரீன் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில், வகுப்பு ஆசிரியையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் ஆசிரியையிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close