இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களில் Tigor மற்றும் Tiago கார்களின் சி.என்.ஜி வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்களுக்கு Flex Fuel Vehicles (FFV) மற்றும் Flex Fuel Strong Hybrid Electric Vehicles (FFV-SHEV) ஆகியவற்றைத் தயாரிக்க தொடங்குமாறு அண்மையில் அரசு அறிவுறுத்திய நிலையில் டாடா இதனை களம் இறக்கியுள்ளது.
இந்த இரண்டு கார்களும் Revotron 1.2L BS6 எஞ்சினில் இயங்குகின்றன. இதற்கான முன்பதிவு கடந்த வாரமே தொடங்கியது குறிப்பிடத்தக்கது. Tigor சி.என்.ஜி இரண்டு வேரியண்டுகளிலும் மற்றும் Tiago சி.என்.ஜி நான்கு வேரியண்டுகளிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Tigor சி.என்.ஜி 7.69 லட்ச ரூபாயிலிருந்தும் (எக்ஸ் ஷோரூம் விலை), Tiago சி.என்.ஜி 6.09 லட்ச ரூபாயிலிருந்தும் விற்பனை செய்யப்பட உள்ளது.
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மாதிரியான எரிபொருளின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு மாற்றாக சி.என்.ஜி-யில் இயங்கும் கார்களை டாடா அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு போட்டியாக டாடாவும் சி.என்.ஜி-யில் என்ட்ரி கொடுத்துள்ளது.
மறுபக்கம் அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக கார்களின் விலையையும் டாடா உயர்த்தியுள்ளது.
Loading More post
`அப்பா, அம்மா... என் இறப்பிலாவது சேருங்க’- 12ம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு
கியான்வாபி மசூதியில் சிவலிங்கமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்